மேட்டுப்பாளையம் வ.உ.சி நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 28). கூலி தொழிலாளி. இந்த நிலையில் விஜய் வேலைக்கு சென்று வரும் போது வெள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆ.சங் கம்பாளையம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கனகமணி (வயது 31). இவர்களிடம் பழனியப்பா வீதியை சேர்ந்த முகமதுபேகம் (33) என்பவர் நண்பராக பழகி வந்தார். அப்போது சரவணம்பட்டியில் உள்ள ஒரு வங்கிக்கு கலெக்சன் செல்வதற்காக அவர்களிடம் இருந்து மதினாபேகம் காரை குறிபிட்ட தொகை வாடகைக்கு விடுமாறு கேட்டுள்ளார். ...
கோவை வழித்தடத்தில் கா்நாடக மாநிலம் விஜயபுரா-கேரள மாநிலம் கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- நவம்பா் 21-ந் தேதி முதல் ஜனவரி 16-ந் தேதி வரை திங்கள்கிழமைகளில், கா்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11 ...
பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமானநிலையம் வந்த தமிழக முதல்வருக்கு பல ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு. ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பல ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ...
கோவை சூலூர் பகுதியில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிகளில் உள்ள விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கி படித்து வருகின்றனர். தற்போது கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சூலூர் ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வேலாண்டிபாளையம் மருத கோனார் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் பணம் வைத்து சீட்டாடுவதாக சாய்பாபா காலனி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தமிழரசு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த ஜோசப் ( 51) வீரைய்யா (34) ...
கோவை : சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங் (வயது 25)இவர் சூலூரில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 4 பேர் இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க ...
கோவை – மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரெயில் தண்டவாளங்கள் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தைவிட 1 அடி வரை உயரமாக உள்ளது. அது அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக ...
கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயதான தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அந்த வியாபரிக்கும் அவரது மனைவியின் தங்கையான 25 வயது திருமணமாகாத இளம் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது .இதனால் அவர்கள் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பட்டணம் ,வெள்ளலூர் பிரிவு, எல்அன்ட்டி பைபாஸ் ரோட்டில் நேற்று கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் மோதிக் கொண்டன. இதில் ஈச்சர் வேன் ஓட்டி வந்த ஈரோடு சென்னிமலை ரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 35) அதே இடத்தில் பலியானார் . வேனில் இருந்த துரைசாமி (வயது) 27 கண்டெய்னர் ...