கோவையில் போதை பொருள் விற்பனை செய்த 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம் க.க.சாவடி காவல் நிலையம் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த பாலக்காட்டைச் சேர்ந்த முகமது ஜெசிர் (வயது 21) அப்துல் ராசிக் (வயது 22) ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் கிணத்துக்கடவு பகுதியிலும் போதை பொருட்கள் விற்பனை செய்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ( வயது 32 ) கிஷார் அகமது (வயது 32) ஆகிய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் .பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முகமது ஜெசிர் அப்துல் ராஷித், ராம்குமார், கிஷார் அகமது ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பெயரில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.