கோவையில் போதை பொருள் கடத்தும். ரவுடி கும்பலுக்கு உதவியதாக போலீஸ்காரரும், வக்கீலும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிக்கியது எப்படி என்பது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:- கஞ்சா விற்ற வழக்கில் கைதான பிரபல ரவுடிகள் சுஜி மோகன், அஸ்வின் ஆகியோரை 4 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து சரவணம்பட்டி ...

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் பீரால் இயங்கும் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மினசோட்டா என்ற மாகாணத்தில் வசிப்பவர் கே மைல்மல்சன். இவர் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக எதாவது சாதிக்க வேண்டும் ...

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்- நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது! கேரளா மாநிலத்தில் ஆவிகளிடமும், தெய்வங்களிடமும் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த நபரிடம் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதியை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்பு எல்லாம் ஆவிகளிடம் பேச வைக்கிறேன், உங்களின் முன்னோர்களின் ஆவிகளுடன் பேச வைக்கிறேன், இறந்து போன உங்கள் நண்பர்கள், ...

சென்னைக்கு அடுத்தாக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய நகரமாக விளங்கும் கோவையில் அடுத்தடுத்து பல முன்னணி ஐ.டி சேவை நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருவதோடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புகழிடமாக மாறி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மெட்ரோ திட்டம் முதல் பல இன்பரா கட்டமைப்புகளை ...

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். அவரது நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக மற்றும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ...

சென்னை: மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, நாகை,காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ...

சென்னை : ஆருத்ரா மோசடியில் பாஜகவின் முக்கிய புள்ளிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், ஆருத்ரா மோசடி பணம் எந்த தமிழக அமைச்சருக்கு சென்றது என DMK files 2ஆம் பாகத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் ...

சென்னை: “பிடிஆர் ஆடியோவை வெளியிட்டதற்காக என்மீது முதல்வர் இன்னொரு அவதூறு வழக்குத் தொடர வேண்டும். அந்த வழக்கில் முழு ஆடியோ ஆதாரத்தையும் நான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கத் தயராக இருக்கிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் அதிருப்தி அடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இது தொடர்பான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸூக்கு சாதகமாக வந்துள்ளன. பாஜகவும், மஜதவும் பெரும் பின்னடைவை சந்திக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த புளியமரம் சாலையில் சாய்ந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வந்த நிலையில் பழமை வாய்ந்த புளியமரம் ...