திமுக-விற்கு சோதனைக்கு மேல் சோதனை… அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு.. பரபரப்பு வீடியோ இதோ.!!

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை-3 ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டு..!

தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியின் சென்னை ஸ்ரீதர் வடக்கு காலனியில் உள்ள வீடு, பொன்முடிக்கு சொந்தமான அலுவலகம், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


அதேபோன்று கள்ளக்குறிச்சி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கௌதம் சிகாமணி வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் ஏற்கனவே முடக்கியுள்ளனர்.

சென்னையில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு மத்திய பாதுகாப்பு படையுடன் களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக மூத்த அமைச்சர் பொன்முடி பல்வேறு காலகட்டங்களில் ஊழல் செய்ததாக அவர் மீது 3 ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதில் கடந்த 2006 ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கிலிருந்து கடந்த ஜூன் 28ஆம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதேபோன்று கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை முதலமைச்சர் மு.கருணாநிதியின் திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை மாற்றியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் கடந்த ஜூலை 6ம் தேதி போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்பொழுது அந்த இடத்தில் கட்டப்பட்ட வீட்டில் தான் அமலக்கத்துறையினர் பொன்முடியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கண்ட இரு வழக்குகளில் இருந்தும் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறையினர் மேல்முறையீடு செய்ய முன்வரவில்லை. அதேபோன்று கடந்த 2007 முதல் 2011 வரை சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது தனது பதவியை தவறாக பயன்படுத்தி குவாரி உரிமம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவரது மகன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆதரவாக குவாரி உரிமம் வழங்கியதாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி கௌதம் சிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஊழல் செய்ததற்கான தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 19(3)(c) இன் கீழ் சிறப்பு நீதிமன்றத்தின் கோப்பு மீதான மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட முடியாது என கௌதம் சிகாமணியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகம் மற்றும் அவருடைய மகன் கௌதம் சிகாமணி எம்பி ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மூன்று வழக்குகளில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர் பொன்முடியும் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சம் திமுகவினர் மத்தியில் நிலவி வருகிறது. பெங்களுருவில் இன்று 2 எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அதே போல் பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்க துறையும், கலைஞர் டிவி ceo வீட்டில் வருமானவரித்துறையும் சோதனை நடத்தி வருவதாக தகவல்.
அதனைத்தொடர்ந்து பொன்முடியின் மகன் கொளதம சிகாமணி வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது…