குழந்தையை முட்ட வந்த மாடு.. கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய நாய்… இணையத்தில் வைரல்.!!

ன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை மாடு ஒன்று தாக்க வந்துள்ளது. உடனே தந்தை வந்த நிலையில் மாடு தலை தரிக்க ஓடியது. தந்தை வந்ததால்தான் மாடு தலை தெரிக்க ஓடியுள்ளது என்று நினைத்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி காணப்பட்டது. அதாவது அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணியான நாய் ஒன்று மின்னல் வேகத்தில் வந்ததை பார்த்து மாடு தலை தெரிக்க ஓடியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.