கோவை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ஒரே நாளில் ரூ. 14கோடியே 50 லட்சத்துக்கு மது விற்பனை.இமாலய சாதனை படைத்தது…

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடையில் உள்ளன .இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு ,கோவை தெற்க, என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகளும் உள்ளன. இந்த கடைகளை ஒட்டி மது பிரியர்கள்அமர்ந்து மது அருந்தும் வகையில் பார் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது பல கடைகளில் மது விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்தது. இதற்காக முன்கூட்டியே அனைத்து கடைகளுக்கும் கூடுதலாக மதுபான வகையில் அனுப்பி வைக்கப்பட்டன. குறிப்பாக பீர் வகைகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.7 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும். ஆனால் இந்த புத்தாண்டை. யொட்டி கடந்த 31ஆம் தேதி கோவை வடக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ 8 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை நடந்துள்ளது. குறிப்பாக 6 ஆயிரத்து 664 பெட்டி பீர் வகைகளை வாங்கியுள்ளனர். 1-ந்தேதி ரூ 4 கோடியே 98 லட்சத்துக்கு விற்பனை நடந்துள்ளது .அது போன்று தெற்கு பகுதியில் கடந்த 31ஆம் தேதி மட்டும் ரூ. 6கோடிக்கு மது விற்பனை நடந்திருக்கிறது. 1-ந்தேதி ரூ 4 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாக இருக்கிறது. குறிப்பாக புத்தாண்டுக்காக கடந்த 31 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.14 கோடியே 50 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மட்டுமே மது வகைகள் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.இதை மீறி விற்பனை செய்தால் எங்களிடம் புகார் செய்யலாம். இவர் அவர்கள் கூறினார்கள்.