மோசடி பத்திரப்பதிவு அலுவலகங்கள் உஷார்… ரூ1 கோடியே 5 லட்சத்தை ஏமாற்றிய திருட்டு ஆசாமி கைது…

சென்னையில் சில ஆண்டுகளாக வீட்டு மனைகள் வாங்க வேண்டுமா கட்டிய வீட்டை வாங்க வேண்டுமா விற்க வேண்டுமா என மோசடி ஆசாமிகள் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர் சமீப காலமாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து மோசடி புகார் சம்பந்தமாக புகார் மனுக்களை அளித்து வருகின்றனர் இந்த வகையில் ராமசாமி என்பவர் தன்னை துரை சே பாலா வயது 39 என்பவன் குன்றத்தூர் ராதாகிருஷ்ணன் நகரில் 2972 சதுர அடி கொண்ட காலி வீட்டு மனை 1 கோடியே 40 லட்சத்து 54 ஆயிரம் என பேரம் பேசி ரொக்கமாக முதல் தவணை யில் பெற்றுக் கொண்டதாகவும் மேலும் பல போலியான நபர்களை வைத்துக்கொண்டு பவர் ஆப் அட்டர்னி மூலம் ஏகப்பட்ட பிராடு வேலைகளை செய்து ரூபாய் ஒரு கோடியே 5 லட்சத்து 50 ஆயிரத்த்தை ஏமாற்றி வாங்கியுள்ளான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசாமி திருட்டு ஆசாமி துரை சே பாலா ஏமாற்றி விட்டதாக புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் சிரஞ்சீவி வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்