வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகப் பகுதியில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்…

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் அட்டகட்டி பயிற்சி மையத்தில் மானாம்பள்ளி மற்றும் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2023 ஆம் ஆண்டின் பருவமழைக்கு முந்தைய குளிர்கால கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி ஆனைமலை புலிகள் காப்பகம் அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற பயிற்சியில் பொள்ளாச்சி துணை இயக்குநர், வனச்சரக மந்திர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் 12.12.2023 இன்று மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள கல்லார் மற்றும் மானாம்பள்ளி பிரிவிற்கு உட்பட்ட 8 சுற்றுக்களில் 16 நேர்கோட்டு பாதையில் அமைக்கப்பட்டு இதேபோல வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அக்காமலை புல்மலைச்சுற்று, அய்யர்பாடி உள்ளிட்ட வன சுற்று பகுதிகளிலும் நேற்று இப்பணி தொடங்கியது மேலும் இப்பணி தொடர்ந்து 14 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஊனுண்ணி மற்றும் பெரிய தாவர உண்ணி மற்றும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி முடிய இறை உண்ணி மற்றும் தாவரங்களின் நிலை குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது இப்பணியில் களப்பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்