இலவச ஒரு நாள் கைத்தொழில் பயிற்சி…

கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் முதல்வர் முனைவர் மோகனசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் படி ஆசனூரில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஆடை வடிவமைப்பு துறையின் மூலமாக கலைஓடை என்ற தலைப்பில் (10.01.2024) அன்று இலவச ஒரு நாள் கைத்தொழில் பயிற்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. P. பாலசுப்பிரமணியம் அவர்கள் வரவேற்புரை நல்கினார் . ஆடை வடிவமைப்புத் துறைபற்றி ஆடைவடிவமைப்புத் துறைத் தலைவி திருமதி.T.ஷாலினி அவர்கள் விளக்கினார். ஆடை வடிவமைப்பு துறையில் உள்ள சுய வேலைவாய்ப்பு பற்றி எடுத்துரைத்தார் . மூன்றாமாண்டு இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் பழைய பொருட்கள் மற்றும் தேவை இல்லாத துணிகளை வைத்து அழகிய பொம்மைகளை செய்து காட்டினர் மற்றும் பாட்டில்களில் அழகான ஓவியம் வரைதல் ஆடைகளில் எம்பிராய்டரி வரைதல் ரப்பர் பேண்டுகள் செய்தல் போன்ற பயிற்சிகளை அளித்தனர்.மாணவிகளும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர். 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் மேற்படிப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாட்டை பள்ளியின் தமிழாசிரியர் திரு ஆர் ரங்கசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். சிறந்த முறையில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.இப்பயிற்சியில் திகேஷ், சரண், நிறைமதி, தீபிகா,மற்றும் லத்திகா 6,7 ,8 9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் சிறப்பு பரிசு பெற்றனர். இப் பயிற்சியைப் பெற்ற மாணவிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே செய்து கொள்ளவும் சுய வேலை வாய்ப்பை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது எனக் கூறினர் . இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்புத் துறை பேராசிரியர்கள்
திருமதி T.ஷாலினி திருமதி K.தேன்மொழி, திருமதி p.அனிதா, திருமதி R.அக்ஷயா மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.