கொளுத்தும் வெயில்… கோடை கால சிறப்பு வகுப்புகள் கூடாது – பள்ளிக்கல்வித்துறை வார்னிங்.!!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அதுவரை கோடை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கடாது.

அதனையும் மீறி கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது தேர்வு எழுதும் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தடுக்க அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.