ஜோதி பவுண்டேஷன் ஏழாம் ஆண்டு துவக்க விழா..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதி பவுண்டேஷன் எண்ணற்ற சேவைகள் செய்து வருகிறது அந்த வகையில் பசியை போக்குவோம் மனிதம் காப்போம் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப சாலையோரங்களில் ஆதரவுற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தினசரி காலை உணவு வழங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில . இன்று ஜோதி அறக்கட்டளை ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் அஞ்சாருவார்த்தலை கிராம அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் பேனாக்கள் இனிப்புகள் வழங்கி மாணவ மாணவிகளுக்கு இயற்கை பேணிக் காக்கும் வகையில் மண்ணையும் மனிதத்தையும் காக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஜோதி பவுண்டேஷன் மரக்கன்றுகள் நடுதல் அவசியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தி மரக்கன்றுகள் வழங்கினார்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு, மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளித்தனர்.

இந்த சிறப்பு நிகழ்வில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் – கனவு ஆசிரியர் வீதி முத்து கனியன், பேராசிரியர் முரளி, மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் அஞ்சல் அதிகாரி ராஜா, ரோட்டரி பிரைட் மயிலாடுதுறை தலைவர் சரவணன், ரோட்டரி பிரைட் செயலாளர் கார்த்திகேயன், குத்தாலம் தொழிற்சங்க கூட்டமைப்பு அமைப்பு சாரா தலைவர் வீரதனபால், குத்தாலம் கட்டுமான சங்கத்தின் தலைவர் குமார், ஹரிஹரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் – இணை செயலாளர் . மண்மனம் கணேஷ் ராம்நாத், பொருளாளர் செந்துர் செந்தில்நாதன், ரமேஷ், பக்கிரிசாமி மற்றும் உறுப்பினர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும்மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் அஞ்சாறுவார்த்தலை கிராம பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஹெலன் மற்றும் இடைநிலை ஆசிரியர் திருமதி ராஜலக்ஷ்மி நன்றியுரை வழங்கினர்.