வாக்கிங்” சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயற்சி.. கோவையில் தொடரும் கொள்ளையர்கள் அட்டகாசம் .!!

கோவை பீளமேடு,ஹட்கோ பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார். டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கவுசல்யா ( வயது 38 ) கணவருடன், தினமும் காலை ,மாலை நேரத்தில் அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம் . இந்த நிலையில் நேற்று பணி காரணமாக அவரது கணவர் நடை பயிற்சிக்கு வரவில்லை . இதனால் கவுசல்யா மட்டும் தனியாக நடை பயிற்சி மேற்கொண்டார் .அவர் ஜீ.வி. ரெசிடென்சி ரோட்டில் உள்ள ” ஸ்பைஸ் குடில் ” அருகே நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு வெள்ளை நிற காரில் மர்ம நபர்கள் வந்தனர். அவர்களில் முன்சீட்டில் இருந்த ஆசாமி காரின் முன்பக்க கதவை திறந்து கையை வெளியே நீட்டி கவுசல்யா கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார் . கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் கவுசல்யா அதிர்ச்சி அடைந்த போதிலும் தனது இரு கைகளால் நகைகளை இருகப் பிடித்துக் கொணடார்.. செயினை பிடித்து இழுக்கும் போது கவுசல்யா ரோட்டில் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சக்கரத்தில் சிக்காமல் ரோட்டில் விழுந்ததால் உயிர் பிழைத்தார். கொள்ளையர்கள் வந்த காரில் நம்பர் பிளேட் எதுவும் இல்லை.இது. குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு கொள்ளையர்களை தேடி வருகிறார்கள் .இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:-.முதலில் நடந்து வந்து செயின் பறித்தார்கள், பிறகு சைக்கிளில் வந்து செயின் பறித்தார்கள்.பிறகு மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறிப்பு சம்பவம் நடந்தது..தற்போது அட்வான்சாக காரில் வந்து நகை பறிக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.இதை போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 3 தனி படை அமைக்கப்பட்டுள்ளது..