கோவையில் ஒரே நாளில் கள் – மது விற்ற 88 பேர் கைது..!

கோவை : விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர் .இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா ?என்பதை கண்டறிய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து,கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை கள்ள சாராயம் விற்பனை எதுவும் இல்லை. சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மது மற்றும் கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .நேற்று மேட்டுப்பாளையம், அன்னூர் ,சிறுமுகை, பொள்ளாச்சி உட்பட ஊரக பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சட்ட விரோதமாக மது மற்றும் கள்விற்பனை செய்த 88 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 165 லிட்டர் கள்மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது . கூறினார் கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவையில் கள்ள சாராயம் விற்பனை எதுவும் இல்லை.சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவர் அவர் கூறினார்.