கேரளாவில் பூக்களுக்கு இடையே மோடியை நோக்கி வந்த மர்ம பொருள்- பட்டென சுதாரித்து தடுத்த எஸ்பிஜி அதிகாரி..!

திருவனந்தபுரம்: பிரதமர் மோடியை நோக்கி வந்த மர்ம பொருள் ஒன்றை எஸ்பிஜி பாதுகாவலர்கள் திடீரென தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவுதான் எஸ்பிஜி.. அதாவது ஸ்பெஷல் ப்ரொடெக்சன் குரூப். பிரதமரை சுற்றி கருப்பு உடையிலும், சபாரி உடையிலும் இருக்கும் வீரர்கள்தான் எஸ்பிஜி.

அதில் பிரதமருக்கு மிக நெருக்கமாக இருக்கும் 4-5 வீரர்கள் எஸ்பிஜியின் உட்பிரிவான சிபிடி பிரிவை சேர்ந்தவர்கள். அதாவது close protection team (CPT) குழுவை சேர்ந்தவர்கள். இவர்கள்தான் பிரதமர் மோடியின் தனி பாதுகாப்பிற்கு இவர்கள்தான் காரணம்.

P-90 sub-machine துப்பாக்கிகள், ஏகே 47, கையில் தனியாக பிஸ்டல் என்று வலம் வருபவர்கள். இந்த அதிகாரிகளுக்கு மிக தீவிரமாக கடினமான பயிற்சிகள் வழங்கப்படும். இவர்களை தேர்வு செய்வதே மிக கடினமான முறைகள் மூலம் செய்யப்படும். பிரதமர் எங்கே சென்றாலும் அங்கே செல்வது. அவருக்கு முன்பாக சிலர் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பை உறுதி செய்வது.

பிரதமர் செல்லும் வழியில் பாதுகாப்பை உறுதி செய்வது. கூட்டத்தை கட்டுப்படுத்துவது, சந்தேகமான ஆட்களை முன்பே பிடிப்பது, பிரதமரை சுற்றி 360 டிகிரியில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது என்று அனைத்து பணிகளையும் இந்த 9 பெண் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இவர்கள் துல்லியமாக துப்பாக்கியால் சுடும் திறன் கொண்டவர்கள், வேகமாக ஓடும் திறன் கொண்டவர்கள். அதேபோல் எந்த நேரத்திலும் டென்சன் ஆகாத எமோஷனல் இன்டலிஜென்ஸ் பயிற்சி பெற்றவர்கள்.

இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான முடிவுகளை எடுக்க கூடியவர்கள். எல்லா நேரமும் தீவிரமாக போகஸ் செய்ய கூடியவர்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் பிரதமர் மோடியை நோக்கி வந்த மர்ம பொருள் ஒன்றை எஸ்பிஜி பாதுகாவலர்கள் திடீரென தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

அதேபோல் இன்று கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.

கேரளாவில் இந்த ரயில் 74 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். வந்தே பாரத் ரயில் 130 கிமீ வேகத்தில் செல்லும் என்றாலும், இதன் சராசரி வேகம் 84 கிமீதான்.

 இந்த நிலையில் திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கே மக்கள் வழி நெடுக நின்று வரவேற்பு கொடுத்தனர். கேரளா கெட்டப்பில் வேட்டி சட்டை அங்கவஸ்திரத்தில் அவர் இன்று அங்கே நடைபயணம் போல மேற்கொண்டார்.

பிரதமர் மோடிக்கு அங்கே மக்கள் வழி நெடுக மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பாட்டில் அல்லது இரும்பு கம்பி போன்ற மர்ம பொருள் ஒன்றை தூக்கி வீசினார்.

பூக்களுக்கு இடையில் வந்த அந்த பொருளை சட்டென பார்த்த எஸ்பிஜி அதிகாரி உடனே சுதாரித்து அந்த பொருளை பிடித்து அப்படியே தடுத்தார். அவர் சமயோஜிதமாக செயல்பட்டதாக நொடியில் மோடி மீது விழ இருந்த அந்த மர்ம பொருள் தடுக்கப்பட்டது.