ராணுவ செலவினம்: 4-ஆவது இடத்தில் இந்தியா..!

ரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் பணவீக்கம் வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. சர்வதேச உணவு விநியோக சங்கிலி பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.
இவ்வாறான சூழலிலும் 2022-ஆம் ஆண்டில் ராணுவத்துக்கான சர்வதேச செலவினம் 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது. ராணுவத்துக்கான சர்வதேச செலவினம் இதுவரை இல்லாத வகையில், கடந்த ஆண்டில் 2.24 லட்சம் கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதென ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ராணுவத்துக்கான மொத்த செலவினமானது சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 2.2 சதவீதமாக உள்ளது. ராணுவத்துக்கு அதிகமாக செலவிடும் நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சீனா 2-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் 3-ஆவது இடத்தில் இருந்த இந்தியாவை கடந்த ஆண்டில் ரஷியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியா 4-ஆவது இடத்திலும், சவூதி அரேபியா 5-ஆவது இடத்திலும் உள்ளன. முதல் 5 இடங்களில் உள்ள நாடுகளின் மொத்த ராணுவ செலவினம், சர்வதேச ராணுவ செலவினத்தில் 63 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ரஷியாவின் ராணுவ செலவினம் 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், உக்ரைனின் ராணுவ செலவினம் 640 சதவீதம் அதிகரித்துள்ளது.