கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம், மீனாட்சி நகர், உடையார் வீதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனம்மாள்( வயது 75) இவரது படுக்கையின் அருகே கொசுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அது படுக்கையில் தவறி விழுந்து மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது .இதில் தனம்மாள் உடல் முழுவதும் கருகியது .அவர் அதே இடத்தில் உடல் கருகி இறந்தார் .இது குறித்து அவரது மகள் ஜெய் சித்ரா துடியலூர் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply