அமோனியா வாயு கசிவு விபத்து – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனப்படுத்துதல் தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவை சுவாசித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்தும் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்தும் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, அது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இச்சம்பவத்தின்போது, ஊழியர்கள் அருகிலுள்ள அறையில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையெனில் இது மனித உரிமைகளை மீறுவதாக ஆணையம் கருதுகிறது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தொழிலாளர்களின் உடல்நிலை, உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட உள்ள நிவாரண நிதி உள்ளிட்ட தகவல்கள் அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஜூன் 22 அன்று ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, சம்பவம் நடைபெற்றவுடன் சென்னை, திருவள்ளூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 59 ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.