திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக் கட்டணம் மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பில் கோயிலின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்டணங்களை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தங்கரத உலா திட்டத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும்,அதற்கு நிரந்தர வைப்பு நிதியை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, சண்முகார்ச்சனை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், மூலவர் அபிஷேகத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கு பதில் இரு நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும், அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் 500 ரூபாயும், விழா நாட்களில் 2 ஆயிரம் ரூபாயாகவும் இருந்ததை, அனைத்து நாட்களுக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாய் என உயர்த்தப்பட உள்ளது.
இது குறித்து பக்தர்களின் கருத்தை வரவேற்றுள்ள கோயில் நிர்வாகம், ஆட்சேபனை இருந்தால் வரும் 7ஆம் தேதிக்குள் கோயில் நிர்வாகத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.









