வால்பாறையில் வீடுகளை உடைத்து ஆளை மிரட்டும் கட்டுயானையால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்…

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காடாடுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் நடமாடி அவ்வப்போது குடியிருப்புகளை சேதப்படுத்தியும் வருகின்றன இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரணாடாவது டிவிஷன் சூடக்காட்டு பாடி பகுதியில் நேற்று நள்ளிரவு புகுந்த மூன்று யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம் கேட்டு எழுந்த அப்பகுதி தோழிலாளர்கள் வீட்டை இடித்து சேதப்படுத்திய காட்டுயானைகளை விரட்ட முற்பட்டபோது அந்த யானைகள் பிளிறியவாறு தொழிலாளர்களை தாக்க துறத்தியுள்ளது இதனால் பெரும் பீதியடைந்த தொழிலாளிகள் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினருடன் தொழிலாளர்களும் இணைந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு அந்த காட்டு யானைகளை அப்பகுதியிலிருந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர் இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் ஆளைமிரட்டி குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தும் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.