பிரதமர் மோடி நாளை மறுதினம் கோவையில் ‘ரோடு ஷோ’- “பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு.!!

கோவை : பிரதமர் நரேந்திர மோடிநாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாலை 5:30 மணிக்கு தனி விமான மூலம் கர்நாடகாவில் இருந்து கோவை வருகிறார். பாஜக கூட்டணியை ஆதரித்து மாலை 5 – 45 மணி முதல் 6-45 மணி வரை ” ரோடு ஷோ “தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் இருந்து ஆர் .எஸ் .புரம், டி.பி. ரோடு வரை இந்த ‘ரோடு ஷோ “தேர்தல் “பிரச்சாரம் நடைபெறுகிறது. காரில் நின்று கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இரவில் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். மறுநாள் (செவ்வாய் ) காலையில் 9 – 45 ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 11 -40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சேலம் புறப்படுகிறார். மதியம் 12-50 மணிக்கு சேலம் செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு, 1 மணிக்கு புறப்பட்டு சேலம் பொதுக்கூட்டம் மேடை சென்றடைகிறார். 1.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 1:55 மணிக்கு ஹெலிகாப்டர் இறங்குதளம் வந்து அடைகிறார். 2- 45 மணிக்கு சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழ்நாடு காவல்துறை சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் நாளை கோவை வருகிறார்.. பிரதமர் பாதுகாப்பு குறித்து கோவையில் போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் வருகையையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி வருகிறார்கள்..