வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பட்டதாரியிடம் மோசடி – கோவை தம்பதி கைது.!!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீதேவி நகரில் வசிப்பவர் செல்லமுத்து. இவரது மகன் சங்கீத்குமார் ( வயது 27) இன்ஜினியரிங் பட்டதாரி. இவருக்கு கோவை பீளமேடு ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் வசிக்கும் ராதிகா (வயது 36) அவரது கணவர் செந்தில் ( வயது 39) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த தம்பதிகள் தாங்கள் பீளமேட்டில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்கள் அனுப்பி வைக்கிறோம் என்றும் குறிப்பாக ஜெர்மனி போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தனர். இதை நம்பிய சங்கீத்குமார் தானும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசையில் முன்பணமாக ரூ 1 லட்சம் கொடுத்தார். ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வெளிநாட்டு வேலைக்கு அவரை அனுப்பி வைக்கவில்லை. சங்கீத்குமார் அந்த தம்பியிடம் பணத்தை திருப்பி கேட்ட போது கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர் எனவே சங்கீத்குமார் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.