பாஜக விற்கும் திமுகவிற்கும் இடையே நடக்கும் போரில் காவல்துறை உள்ளே வரக்கூடாது: வன்முறையை பாஜக விரும்பவில்லை- அண்ணாமலை பேட்டி..!

தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் பிரச்சனைகள் குறித்து டிஜிபி இடம் பேசியுள்ளோம் பாஜக சார்பில் நான்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது இவர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் டிஜிபி அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் பாஜக தொண்டர்கள் அமைதியாக வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம் காவல்துறை ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாலும் கூட தற்பொழுது சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிக அளவில் இதே போல் மேற்கொள்ள வேண்டும் 15 மாத காலமாக தமிழக உளவுத்துறை சரிவர செயல்படவில்லை கோவை காவல்துறை அதிகாரிகள் மீது நான் புகார் கொடுக்க உள்ளேன் பாஜக தொண்டர்கள் மீது கை வைத்த யாரையும் விடமாட்டேன் இன்னும் இரண்டு ஆண்டில் திமுக ஆட்சியில் இருக்காது நாளை பிஜேபி சார்பில் கண்டன போராட்டம் நிச்சயமாக நடத்தப்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைய கோவை மாநகர காவல் துறையை இதற்கு காரணம் காவல்துறை நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் தடையை மீறி பாஜக சார்பில் கண்டன போராட்டம் நிச்சயமாக நடைபெறும் கருத்து சொன்னால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாது காவல்துறை ஏவல்துறையாகவே உள்ளது பொதுமக்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ மீது முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை அதையும் பார்த்துக்கொண்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்காது பாஜகவிற்கும் திமுகவிற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக்கூடாது வன்முறையை பாஜக விரும்பவில்லை நாங்கள் பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம் முதலமைச்சர் உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும் என்றார்