பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை: சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் – பி. எப்.ஐ. நிர்வாகிகள் சூளுரை..!

கோவை : பி. எப். ஐ.அமைப்பின் நிர்வாகிகள் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளில் ஒன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. இந்த அமைப்பு திடீரென்று ஒன்றிய அரச தடை செய்யப்பட்டிருக்கின்றன. 5வருடத்திற்கு தடை விதித்து ஒன்றிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். சுதந்திரம், நீதி, பாதுகாப்பு, அனைத்து முஸ்லிம்களின் வாழ்வாதார மேம்பாடு, சமநிலை உடைய புதிய இந்தியா உள்ளிட்ட நோக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் ஆனால் முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து ஒன்றிய அரசாங்கம் அமைப்பை தடை செய்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். மோடியை கொல்ல சதித்திட்டம், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு நிதி உதவி, வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்களுக்கு நிதி உதவி, வட மாநிலத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தலித் சிறுமி தொடர்பான போராட்டத்தின் பின்னணியில் பி.எப்.ஐ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஒன்றிய அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் அந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் பி எப் ஐ நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்து சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர் எஸ் எஸ் சங்பரிவார் அமைப்புகள் செயல்படுகின்ற நிலையில் அதற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இருப்பதாகவும் அதனாலயே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பை தடை செய்ததாகவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்தவர்கள் குற்றம் சாட்டினர். சமநிலை அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்திற்கு எதிராக சமநிலையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று போராடும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஒன்றிய அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இந்த தடையை சட்டரீதியாக உடைத்தெறிய நீதிமன்றத்தை நாடுவதாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சூளுரைத்திருக்கின்றனர். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.