கோவை தொழிற்சாலையில் 16 வயது வடமாநில சிறுவன் மீட்பு-உரிமையாளர் மீது வழக்குபதிவு..!

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள நாராயணகுரு ரோட்டை சேர்ந்த அரவிந்த் (வயது 45) இவருக்கு சொந்தமான தொழிற்சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்காளி பாளையத்தில் உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது திட்ட அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் அங்கு திடீர் சோதன நடத்தினார்கள். அப்போது அங்கு 16 வயது சிறுவன் பணியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஒடிசாவை சேர்ந்த அந்த சிறுவனை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர் .இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் அரவிந்த் (வயது 45) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..