வால்பாறையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் வால்பாறை 9 வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் மற்றும் எம்ஜிஆர் நகர்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த மண்சரிவு பற்றிய தகவலறிந்த நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி கூடுதல் பொறுப்பு ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை ந.கணேசன், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர்,நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார், பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தனர் மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை அவசரகால நடவடிக்கையின் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்..