அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை ஒருங்கிணைந்த அதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீபகாலமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் குறிப்பாக தக்காளி வெங்காயம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டங்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கெடுத்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் பேரணியாக வந்து தக்காளியை மாலையாக போட்டுக் கொண்டும் தக்காளியை கூடையில் வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், சேவூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், டிஸ்கோ குணசேகரன், சுனில் குமார் மற்றும் பலர் பங்கேற்று விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..