கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,ஆர்.வி.எல் நகரை சேர்ந்த சுகுமார். இவரது மனைவி.காமாட்சி ( வயது 34) இவர் நேற்று உப்பிலிபாளையம் ஆர் .வி. எல்.நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த டாலருடன் கூடிய 8 பவுன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.இது குறித்து காமாட்சி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார்வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பிய கொள்ளையர்களைதேடி வருகிறார்கள்.