திருப்பூர் மாவட்டம்: ராக்கிபாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜ பிரபு ( வயது 19) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அங்குள்ள பூங்கா நகரில் தனது நண்பர்கள் கோகுல், அகிலேஷ் ,தூசர் ஆகியோருடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.நேற்று முன் தினம் இரவில் இவர்கள் அறையில் இருந்த போது 20 வயது மதிக்கத்தக்க 4 பேர் அறைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து 4 செல்போன்,சில்வர் பிரேஸ்லெட், சில்வர் செயின், சில்வர் மோதிரம், சில்வர் காப்பு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து மாணவர் ராஜ பிரபு பீளமேடு போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
Leave a Reply