ஈசா ஜக்கி வாசுதேவ் என் கணவர்: எனக் கூறிய பெண்ணால் பரபரப்பு

ஈசா ஜக்கி வாசுதேவ் என் கணவர்: எனக் கூறிய பெண்ணால் பரபரப்பு

கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனச்சரகம் அலுவலகம் அருகே, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரவு 9.30 மணியளவில் ஜக்கி வாசுதேவ் தனது கணவர், அவரை வரசொல்லுங்கள் என அங்கிருந்த மக்களிடம் கூறியுள்ளார். இப்பெண் குறித்து , அப்பகுதி மக்கள் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். தான் பெயர் ஸ்ருதி , கார்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் . ஈசா , ஜக்கி வாசுதேவ் தனது கணவர் எனக்கூறியுள்ளார். அவர் உன் கணவர் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என, அப்பெண்ணிடம் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் துருவித்துருவி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் டி எஸ் பியும் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்பெண் அவரிடம் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், ஆதாரம் வேண்டுமா எனக்கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஸ்ருதி விசாரணையின் போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகவும், தமிழில் கொஞ்சம் கொஞ்சம் பேசியதாக தெரிகிறது. மேலும் தன்னைப்பற்றியும், பெற்றோர்கள் பற்றிய விபரங்களையும் காவல் துறையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் விசாரணையை முடித்துக்கொண்ட காவல் துறையினர், ஆர் எஸ் புரம் பகுதியிலுள்ள பெண்கள் இல்லத்திற்கு ஸ்ருதியை அழைத்துச்சென்றனர். நாளை காலை மீண்டும் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஈசா யோக மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் செம்மேடு அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜக்கி வாசுதேவ் என் கணவர் என்கூறிய ஸ்ருதியால் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.