பொங்கல் பண்டிகை: தல அஜித் துணிவு படத்திற்கு 1500 ரூபாய் பிளாக் டிக்கெட்டுகள் கோவையில் விற்பனை

பொங்கல் பண்டிகை: தல அஜித் துணிவு படத்திற்கு 1500 ரூபாய் பிளாக் டிக்கெட்டுகள் கோவையில் விற்பனை

பொங்கல் பண்டிகை ஒட்டி விஜய், அஜித் நடிக்கும் வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளிவர உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொங்கல் விடுமுறை என்பதாலும், தல, தளபதி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படத்தை காண முன் பதிவு செய்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுக்கான ஒளிபரப்பு செய்யும் திரைப்படத்திற்கு மொத்தமாக முன்பதிவு செய்து சிலர் அதிக விலைக்க விலை டிக்கெட் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பாபா சினிமாஸ் (அர்ச்சனா) திரையரங்கின் டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஒரு டிக்கெட்டின் விலை 1500 ரூபாய் என்றும் மொத்தம் 30 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் உள்ளதாகவும் கூறினார். மேலும் இவர் விற்கும் டிக்கெட் சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

 

 

அதில் ஒரு டிக்கெட்டின் விலை 190 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.