சொத்து தகராறில் பெட்ரோல் ஊற்றி தம்பியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி – அண்ணன் கைது..!

கோவை புலியகுளம் ,சின்ன மருதாச்சலம் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது அண்ணன் பாண்டியராஜன் ( வயது 70) அங்குள்ள ,சுப்பையா கவுண்டர் வீதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.தம்பி செல்வராஜுக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று பாண்டியராஜா குடிபோதையில் தம்பி செல்வராஜ் வீட்டுக்கு வந்தார். இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. அப்போது வீட்டிலிருந்த தம்பி செல்வராஜுடன் வீட்டு சொத்து தனக்கு மட்டும் தான் என்று கூறி பாண்டியராஜன் தகராறு செய்துள்ளார். எனக்குத்தான் சொந்தம் என்று அவரது தம்பி செல்வராஜ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியராஜன் வீட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து தம்பியின் உடல் மீது ஊற்றி தீவைத்தார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ வைத்து எரிக்கப்பட்ட செல்வராஜ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது .இது தொடர்பாக ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அண்ணன் பாண்டியராஜனை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் ஊற்றி தம்பி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..