மாஸ்கோ: உக்ரைன் போரின் எதிரொலியாக தற்போது ரஷ்யாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.உக்ரைனை ஆக்கிரமிக்க கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய விளாடிமிர் புடின் அரசு திடீரென ரஷ்ய ராணுவத்துக்கு அதிரடித் தாக்குதலுக்கு நடத்த உத்தரவிட்டது.
இதனால் நிலைகுலைந்து போன உக்ரைன் ராணுவம், ரஷ்ய ராணுவத்துடன் கடும் மோதலில் ஈடுபட்டது.லட்சக்கணக்கான உக்ரைன் குடிமக்கள் இதனால் அண்டை நாடுகளான பெலாரஸ், போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து உள்ளனர். இந்திய மாணவர்கள் 20 ஆயிரம்பேர் மத்திய அரசின் முயற்சியால் பாரத நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.உக்ரைன்-ரஷ்ய உயர்மட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து 10வது நாளாக தற்போது போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு பத்துக்கும் மேற்பட்ட உலக நாடுகள் நிதி மற்றும் ஆயுதம் வழங்கி உதவி வருகின்றன. ரஷ்யாவின் செயலை கண்டித்துள்ள அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் தங்களது வர்த்தக தொடர்பை துண்டித்துக் கொண்டன.குறிப்பாக உணவு நிறுவனங்கள் ரஷ்யாவுடனான தொடர்பை துண்டித்ததால் தற்போது ரஷ்ய மக்கள் கடும் உணவு பஞ்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் ரஷ்ய உணவுப் பொருட்கள் விற்கும் அங்காடிகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கள்ள சந்தையில் உணவை விற்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் ரஷ்யாவில் செயல்படும் உணவு மொத்த கொள்முதல் உற்பத்தியாளர்கள் உணவு விநியோகத்தை குறைத்துள்ளனர். ரஷ்ய குடிமகன் ஒருவரது வீட்டுக்கு சராசரியாக வழங்கப்படும் உணவின் அளவை குறைக்க ரஷ்ய உணவு விற்பனை வியாபாரிகள் சங்கம் தற்போது கட்டுப்பாடு விதித்துள்ளது. இவ்வாறு கட்டுப்பாடு விதித்தால் தான் அனைவருக்கும் சரிசமமாக உணவை பங்கிட்டு கொடுக்க முடியும் என்கிற நிலை தற்போது ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது.
Leave a Reply