குடிமகன்களுக்கு செம குட் நியூஸ்… ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை.. மதுபானங்களுக்கும் 30 சதவீத வரி ரத்து..!

க்கிய அரபு எமிரேட்ஸ்-ல் முக்கிய வர்த்தகப் பகுதியாக இருக்கும் துபாய் பிற வளைகுடா நாடுகளை விடவும் அதிகப்படியான விதிமுறை தளர்வு, வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில் துபாய் அரசு தனது வருவாயைக் கச்சா எண்ணெய் அல்லாத துறையில் முதலீட்டு வாயிலாக அதிகரிக்க முடிவு செய்திருக்கும் இதேவேளையில் சுற்றுலாத் துறையைச் சார்ந்தும் அதிக வருவாய் ஈர்க்கும் முடிவை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக மதுபான விற்பனை துபாய் முழுவதும் எளிதாக்கும் வகையிலும் அதேநேரத்தில் சுற்றுலா பயணிகல் மூலம் அதிக வருவாய் ஈர்க்கும் முயற்சி உடன் இந்த முடிவை எடுத்துள்ளது.

துபாய் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஜனவரி 1 முதல் அனைத்து விதமான மதுபான விற்பனைக்கும் 30 சதவீத வரி விதிப்பை ரத்து செய்யவும், மதுபான விற்பனைக்குத் தேவையான உரிமங்களை இலவசமாகப் பெற அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் துபாய் அரசு குடும்பத்திற்கு கிடைத்து வரும் அதிகப்படியான மதுபான விற்பனை வருவாய் முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் துபாய் நாட்டின சுற்றுலாப் பயணிகளின் வருகையை இதன் மூலம் அதிகரிக்க முடியும். இதன் வாயிலாக கூடுதல் வருவாய் பெற முடியும் என நம்புகிறது. இதேபோல் மதுபானம் சார்ந்து துபாயில் தனி வர்த்தகச் சந்தை உருவாகும்.

இந்த அறிவிப்பு துபாய் நாட்டின் இரண்டு அரசு மதுபான விற்பனையாளர் நிறுவனங்களில் வெளியிடப்பட்ட புத்தாண்டு தின அறிவிப்பாகும். இந்த நிறுவனங்கள் துபாய் ஆளும் அல் மக்தூம் குடும்பம் அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது.

துபாயில் மதுபானம் விற்பனை மீதான பல ஆண்டுகளாகப் படிப்படியாகத் தளர்த்தப்பட்ட விதிமுறைகள் மூலம் இப்போது ரமலான் பண்டிகையின் போது பகல் நேரங்களில் மதுபானம் விற்கப்படுகிறது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் தொடக்கத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் மதுபானம் ஹோம் டெலிவரி செய்யும் சேவை வழங்கப்பட்டது. தற்போது வரி ரத்து, இலவச உரிமம் போன்ற பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

துபாயின் பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவை கணிக்க முக்கியக் காரணியாக மது விற்பனை அளவீட்டை நீண்ட காலமாக முக்கியமான அளவு கோளாக உள்ளது. சமீபத்தில் கத்தார் நாட்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, துபாயின் பல பார்கள் சர்வதேச ரசிகர்களை ஈர்த்தது.

எமிரேட்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மதுபான விநியோகஸ்தர் மரிடைம் மற்றும் மெர்கன்டைல் இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் துபாயில் எங்கள் வர்த்தகத்தைத் துவங்கியதில் இருந்து இன்று வரையில் தொடர் வளர்ச்சி பாதையிலும் புத்துணர்ச்சி உடனும் உள்ளது.

சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு வரும் விதிமுறைகள் மூலம் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் மதுபானங்களைப் பாதுகாப்பான முறையில் பொறுப்பான கொள்முதல் மற்றும் நுகர்வை உறுதி செய்வதற்கு முக்கியக் கருவியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதோடு “நீங்கள் இனி மக்கள் யாரும் மதுபானத்திற்காக மற்ற எமிரேட்டுகளுக்கு ஓட்ட வேண்டியதில்லை” என்று கூறியது.

துபாய் மக்கள் நீண்ட காலமாக மொத்தமாக மற்றும் வரி இல்லாத மதுபானங்களை வாங்குவதற்காக உம் அல்-குவைன் மற்றும் பிற எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று வந்தனர். இதன் துபாயில் வரி இல்லாமல் மதுபானத்தை வாங்க முடியும்.

துபாய் சட்டத்தின்படி, முஸ்லீம் அல்லாதவர்கள் மது அருந்துவதற்கு 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். துபாய் காவல்துறையால் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டைகளை எடுத்துச் சென்று தான் மது வாங்கவும், மது கொண்டு செல்லவும் மற்றும் மது உட்கொள்ளவும் அனுமதிக்கும்.

துபாய் காவல்துறையால் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டைகள் இல்லாத பட்சத்தில், மதுவுடன் காவல் துறையிடம் சிக்கினால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் கைது செய்யப்படலாம் இது துபாயில் நடைமுறையில் இருக்கும் விதிமுறை.