அதிக விலைக்கு விற்கப்படும் மது: ரசீது கேட்டதால் வாக்குவாதம்- செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்..!

கோவை ஒண்டிபுதூர் பகுதில் 1698 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை
அமைந்து உள்ளது. அந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் எடிசன் என்பவர் பணி புரியும் வருகிறார்.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மது வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அவர் வாங்கிய மதுவிற்கு அதிக பணம் கேட்டு உள்ளனர். இதனால் அவர் ரசீது கேட்டு, கேள்வி எழுப்பி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் சாதி பெயரைக் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கிருஷ்ணசாமி ஆதித்தமிழர் கட்சியினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்த கட்சியைச் சேர்ந்த மாநில பொறுப்பாளர் கோவை தென்னரசு அங்கு வந்துள்ளார். இது குறித்து மேற்பார்வையாளரிடம் கேட்டுள்ளார். மேலும் அவரிடம் வாங்கிய மதுவிற்கு ரசீது கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.