பெண் மீது ஆசிட் வீசிய சம்பவத்தின் எதிரொலி… கோவை நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டர் சோதனை…!

கோவை ராமநாதபுரம் ,காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42) லாரி டிரைவர் .இவரது மனைவி கவிதா( வயது 35) இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர் .கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ராமநாதபுரத்திற்கு வந்து குடும்பமாக வசித்து வந்தனர் .இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு பஸ்சில் சென்றபோது கவிதா ஒரு பயணியிடம் நகை திருடி உள்ளார். இதுகுறித்து ஆர். எஸ் புரம். போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவை கைது செய்தனர் .பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த கவிதாவுக்கு பலரிடம் கள்ள தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இதை கணவர் சிவகுமார் கண்டித்தார் ஆனால் அவர் கேட்கவில்லை இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கவிதாவுக்கு ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .இதை அறிந்த சிவக்குமார் அவரைக் கண்டித்து உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக கவிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு சென்று விட்டார். பின்னர் அவர் தனது கள்ளக்காதலனுடன் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் வசித்து வந்தார். இதை அறிந்த சிவக்குமார் பலமுறை அங்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கவிதாவை அழைத்தார் .ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்துவிட்டார் இதனால் கவிதா மீது சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதற்கிடையே கவிதா மீது உள்ள திருட்டு தொடர்பான வழக்கு கோவையில் உள்ள முதலாவது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது .இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அதில் ஆஜராதற்காக கவிதா நேற்று காலையில் கோவை கோர்ட்டு வளாகத்துக்கு வந்தார். இதை அறிந்த சிவக்குமாரும் அங்கு சென்றார். .அவரை பார்த்ததும் கவிதா கோர்ட் வளாகத்தில் முதலாவது மாடியில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு சென்றார் .உடனே சிவக்குமாரும்,அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். உன்னை பார்க்காமல் குழந்தைகள் சோகமாக உள்ளனர். என்னுடன் வந்து விடு. நாம் சந்தோசமாக வாழலாம் என்று கூறி குடும்பம் நடத்த அழைத்துள்ளார.ஆனால் கவிதாமறுத்தார் .எனக்காக நீ வராவிட்டாலும் குழந்தைகளுக்காவது நீ வரவேண்டும் என்று மீண்டும் அழைத்தார். அதற்கும் எந்தவித பதிலும் சொல்லாமல் நின்ற கவிதா தனக்கு கோர்ட் நேரமாகிவிட்டது இப்போது என்னை அழைத்து விடுவார்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றார் .உடனே சிவக்குமாரும் பின்தொடர்ந்து சென்றார்.. அப்போது கவிதா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட் வாசல் அருகே சென்று நின்றார்.. இதனால் சிவகுமார் அங்கிருந்து சென்றார். இதற்கிடையே வழக்கு விசாரணைக்கு வந்ததும் கவிதா உள்ளே சென்றார். சாட்சி விசாரணை முடிந்த பிறகு அழைப்பதாக கூறியதால் கோர்ட்டுக்கு வெளியே குற்றம் சாட்டப்பட்டவர்கள் காத்திருக்கும் பகுதியில் கவிதா அமர்ந்திருந்தார். அங்கு வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். இதை யடுத்துசிவகுமார் மீண்டும் அங்கு வந்தார் .அப்போது கவிதா பேசாமல் நின்றார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் நான் எவ்வளவு நேரம் அழைத்த பிறகும் நீ வீட்டுக்கு வர மாட்டாயா? என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை திறந்து அதிலிருந்து ஆசிட்டை கவிதா மீது வீசினார் .அவர் உடல் முழுவதும் ஆசிட்பட்டு வெந்தது அவர் அணிந்திருந்த சேலையும் தீ பிடித்து எறிந்தது . ஆசிட் வீசப்பட்டதால் கவிதா வலியால் அலறி துடித்தார். அவரது அலறல்சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .இதையடுத்து வக்கீல்கள் ஓடி வந்து காயத்துடன் உயிருக்கு போராடிய கவிதா மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்தடாக்டர்கள் ஆசிட் பட்டதில் 85 சதவீதம்உடல் வெந்திருப்பதாக டாக்டர்கள். கூறினார்கள்.நீதிமன்ற வளாகத்தில் தப்பி ஓட முயன்ற சிவகுமாரை ஆனைமலை பெண் போலீஸ் கவிதாமற்றும் வழக்கறிஞர்கள் சேர்ந்து துரத்திப் பிடித்தனர். அவரை சரமாரியாக தாக்கி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர் .இது தொடர்பாக போலீசார்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். .ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த கவிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று நீதிமன்ற வளாகத்துக்குள் செல்பவர்கள்.. மெட்டல் டிடெக்டர். சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.