கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் காவலாளி, வடமாநில வாலிபர் பலி..!

கோவை மதுக்கரை அருகே உள்ள குமிட்டி பதி,வழுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 47) தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று ஒத்த கால் மண்டபம்- வேலாந்தவளம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற 4 சக்கர வாகனத்தை தேடி வருகிறார்.

இதே போல ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரர் கோபி ( வயது 24) கூலி தொழிலாளி இவர் நேற்று பொள்ளாச்சி- கோவை ரோட்டில் நடந்து சென்றார். கிணத்துக்கடவு பக்கம் உள்ள எஸ். மேட்டுப்பாளையம் அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன பஸ் இவர் மீது மோதியது. இதில் பரமேஸ்வரர் படுகாயம் அடைந்தார் .சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.பஸ் டிரைவர் தங்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.