கோவை அருகே உள்ள இருகூர், மகாகவி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 43) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காரில் இருகூர் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கிரேன் இவர் சென்ற கார் மீது மோதியது. இதில் கார் ஓட்டி வந்த இருகூர் டி. எஸ் .கே .நகரை சேர்ந்த சரவணகுமார் (வயது 40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.வழியில் காரில் பயணம் செய்த தங்கராஜ் இறந்தார். கார் டிரைவர் சரவணகுமார் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தங்கராஜ் மனைவி கலைவாணி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் கிரேன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply