கோவை சாலை விபத்தில் ஒரே நாளில் 4 பேர் பரிதாப பலி..!

கோவை மாவட்டம நெகமத்தில் உள்ள காளிமுத்து தோட்டத்தில் வசிப்பவர் வேலுசாமி. இவரது மகன் மீனாட்சி சுந்தரம் (வயது 23 )இவர் நேற்று நெகமம் -தாராபுரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .சின்ன நெகமம் சமுதாயக் கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது .இதில் மீனாட்சி சுந்தரம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். இது குறித்து அவரது தாயார் லட்சுமி நெகமம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கார் ஓட்டி வந்த பெரிய நெகமத்தைச் சேர்ந்த சம்பத்குமார் ( வயது 25 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல கோவை அருகே உள்ள செரையாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 47) இவர் நேற்று வெள்ளானைப்பட்டி- செரையாம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறு கீழே விழுந்தார் .இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து இவரது மகன் அறிவழகன் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூலூர் பக்கம் உள்ள காங்கேயம் பாளையம் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது76) இவர் நேற்று ஸ்கூட்டியில் குமாரபாளையம்- செங்கத்துறை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறு கீழே விழுந்தார். பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் .இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 72 )இவர் நேற்று பீடம் பள்ளி -கண்ணம்பாளையம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் கோபால் படுகாயம் அடைந்தார் .இது குறித்து அவரது மகன் பார்த்திபன் சூலூர் போலீசில்புகார் செய்தார். போலீசார் ஆட்டோ ஓட்டி வந்த வெள்ளலூரை சேர்ந்த மனோரஞ்சித் (வயது 29) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.