கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை..!

கோவை ராமநாதபுரம் சுங்கம்,பைபாஸ் ரோட்டில் உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 37) கட்டிட தொழில் செய்து வருகிறார். நேற்று இவர் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது முன் கதவை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் இருந்த பணம் ரூ 1500 மற்றும் ஒரு செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.இது குறித்து அய்யாதுரை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.