பட்டாசு வெடித்து கணவன்- மனைவி படுகாயம்..

பட்டாசு வெடித்து கணவன்- மனைவி படுகாயம்.. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 37 )விவசாயி. அவரது மனைவி நந்தினி வயது 31 பழனிச்சாமி அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது .இதனால் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை இருந்து வந்தது அவற்றை விரட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பழனிச்சாமி விவசாய நிலத்துக்குள் 4காட்டுயானைகள் புகுந்தது .உடனே அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து காட்டு யானைகளை விரட்ட முயன்றார் .அப்போது அவர் கையில் வைத்திருந்த பட்டாசுகள் எதிர்பாராதமாக வெடித்து சிதறியது. இதில் பழனிச்சாமியும் அவரது மனைவி நந்தினிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.