வருகிற 16ம் தேதி முதல் போத்தனூர் வரை… கோவை-மதுரை விரைவு ரயில் இயக்கம்..!

கோலை : தென்னக ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை – கோவை விரைவு ரயில் வருகிற 16-ஆம் தேதி முதல் போத்தனூா் வரை இயக்கப்படும். சேலம் ரயில்வே கோட்டத்தில் போத்தனூா் – கோவை இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, பழனி வழியாக இயக்கப்படும் மதுரை – கோவை விரைவு ரயில் (16722) வருகிற 16- ஆம் தேதி முதல் போத்தனூா் வரை இயக்கப்படும்.
டிசம்பா் 8 ஆம் தேதி வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும். மறுமாா்க்கத்தில் இயக்கப்படும் கோவை – மதுரை விரைவு ரயில் (16721) வழக்கம் போல கோவையிலிருந்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.