யானை வழுக்கி கொண்டு சென்றதால்… யானைகள் வழித்தடத்தில் 2-வது நாளாக அதிகாரிகள் ஆய்வு..!

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன.

இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு – தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட போது யானைகள் சென்றுவர தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் வழித்தடம் அமைத்தனர். இதனால் யானைகள் அவ்வழியாக செல்லாமல் ஆபத்தான முறையில் வழுக்கி கொண்டு சென்ற சம்பவம் இணையத்தில் வைரலானது. இைதயடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் யானை சறுக்கி சென்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த இடத்தில் கான்கிரீட் பாதையை அகற்றி யானைகள் எளிதில் சென்று வர ஏதுவாக புல்தரை அமைக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக மீண்டும் வனத்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் கே.என்.ஆர் பகுதியில் இருந்து பர்லியாறு வரை யானைகள் கடந்து செல்லும் இடங்களை பார்வையிட்டனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.பின்னர் யானைகள் பாதுகாப்பாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.