கோழித் தீவனம், போக்குவரத்து செலவு உயர்வால் ஒரு முட்டையின் கொள்முதல் விலையை ரூ.7 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் சிங்கராஜ் பேசியதாவது: தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும். தற்போது, டீசல், தீவனத்தின் விலை உயர்ந்துள்ளதால், முட்டை உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது.எனவே, ஒரு முட்டையின் கொள்முதல் விலையை ரூ.7 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால் தினசரி 25 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதியாகிறது இவ்வாறு பேசினார்.








