கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் ராமசாமி .இவரது மனைவி மீனா (வயது 23)இவர்கள் இருவரும் 5-9- 2017 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர் .ராமசாமியின் சொந்த ஊர் தென்காசி.இவர்களுக்கு பிரநயா (வயது 4 )அக்ஷயன் (வயது 2) ஆகிய 2குழந்தை உள்ளனர்.நேற்று மீனா அவரது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது தந்தை ஜெயபாண்டியன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் மீனாவின் மகன் ஜட்டி போடாமல் விளையாடிக் கொண்டிருந்தானாம். இதை கணவர் ராமசாமி கண்டித்தார் .இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply