ஆன்லைன் மூலம் பழகி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ19 லட்சம் மோசடி..!!

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ராஜேஸ்வரி( வயது 36.)இவரிடம் மர்க்கா சிங் என்பவர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதை ராஜேஸ்வரி நம்பினார்.இந்த நிலையில் மர்க்கஸ் சிங்தனது தாயின் மருத்துவச் செலவுக்கு ரூ 10லட்சம் வேண்டும் என்று கேட்டார்.அதை ராஜேஸ்வரி அவரிடம் கொடுத்தார்.பின்னர் மேலும் ஒரு 9லட்சம் வேண்டும் என்றார். மொத்தம் ராஜேஸ்வரியிடம் 19 லட்சம் பணம் வாங்கினார்.அதை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றிவிட்டார்.இது குறித்து ராஜேஸ்வரி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஜெயதேவி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்கஸ்சிங், ஜித்தா ஆகியோரை தேடி வருகிறார்.