சென்னை: மருத்துவ அறிக்கையின்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் ...

கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள ஆத்துபாலம் அருகில் ஆற்றில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும்.அவர் யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து ஆழியார் கிராம நிர்வாக அதிகாரி சித்தேஸ்வரன் ஆழியார் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத ...

கோவை அருகே உள்ள சுந்தராபுரம், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், இவரது மகன் சுரேந்திரன் (வயது 30) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செட்டிபாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ...

கோவை தடாகம் பகுதியில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, அன்னூர் அடுத்த நாரணாபுரம் பகுதியில் இறக்கிவிட்டு மீண்டும் தடாகம் நோக்கி சென்றது . அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நாரணாபுரம் ஏ.டி காலனி பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த ...

கோவை: பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 34). கூலி தொழிலாளி. இவர் தனது மாமா சாதிக் என்பவருடன் நேற்று அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஷாஜகானின் காலணி ஆற்றில் விழுந்தது. உடனே அவர் ஆற்றில் குதித்து காலணியை எடுக்க சென்றார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. ...

கோவை: நாடு முழுவதும் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ...

கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டு அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு செல்போன்களை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வந்தனர். அப்போது ஒரு தம்பதியினர் மனு கொடுக்க வந்தனர். அவர்களை ...

வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ள பாகிஸ்தானில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இருவாரங்களாக வரலாறு காணாத சீற்றத்துடன்பொழிந்து கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள பாதிப்பானது சிந்த், பலுசிஸ்தான், கைபர்பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ...

தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா தனது இரண்டு போர் கப்பல்களை தைவான் ஜலசந்தி வழியாக அனுப்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவான் தன்னை தனி நாடாகவே கருதி வருகிறது. ஆனால் சீனாவோ தைவானை தங்களது எல்லைக்குட்பட்ட பிராந்தியம் என்று சொல்லி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் எதிர்ப்பையும் ...