பாகிஸ்தானுக்கு ரூ.1,273 கோடி வெள்ள நிவாரண உதவி- ஐ.நா. உலக நாடுகளுக்கு கோரிக்கை..!

வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 16 கோடி டாலா் (சுமாா் ரூ.1,273 கோடி) நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உலக நாடுகளை ஐ.நா.கோரியுள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் இன்னலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் மீது பருவமழை இரக்கமற்ற தாக்குதலை நடத்தியிருக்கிறது. கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 52 லட்சம் பேருக்கு உடனடியாக 16 கோடி டாலா் நிவாரண உதவி தேவைப்படுகிறது.

உணவு, குடிநீா், வடிகால், அவரசகால கல்வி, பாதுகாப்பு, மருத்துவ வசதிகளை அளிக்க இந்தத் தொகை உதவும் என்றாா் அவா்.