கோவையில் பைக் மீது கார் மோதி கணக்காளர் பரிதாப பலி..!

கோவை அருகே உள்ள சுந்தராபுரம், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், இவரது மகன் சுரேந்திரன் (வயது 30) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செட்டிபாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் சுரேந்திரன் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் சகாபுதீன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.