ஆழியார் ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..!

கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள ஆத்துபாலம் அருகில் ஆற்றில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும்.அவர் யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து ஆழியார் கிராம நிர்வாக அதிகாரி சித்தேஸ்வரன் ஆழியார் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.