ஆசிரியை பயிற்சி முடித்த இளம்பெண் எங்கோ மாயம்..!

கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் கிருத்திகா( வயது 19) ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளார் .தற்போது இவர் நடன வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் நேற்று நடன வகுப்புக்கு
சென்ற கிருத்திகா வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து அவரது தந்தை சின்னதுரை சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.